மேற்கு வங்கத்தில் பாதிக்கப்பட்ட சந்தேஷ்காளி பெண்களுக்கு நீதி பெற்றுத்தர அனைத்து அரசியல் இயங்களும் முன்வர வேண்டும் என, இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணி விடுத்துள்ள அறிக்கைியில், மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானா மாவட்டத்தை சேர்ந்த சந்தேஷ்காளி கிராமம் பங்களாதேஷ் எல்லையை ஒட்டிய தீவு பகுதி கிராமம். இந்த கிராமத்தில் பட்டியல் சமூகத்தினர் மற்றும் பட்டியல் பழங்குடி சமூகத்தினர் பெரும்பாண்மையாக வசிக்கும் பகுதியாகும்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மம்தா பானர்ஜி ஆட்சிக்கு வந்தபின்னர் ரோஹிங்கியர்கள் மற்றும் பங்களாதேசியர்களின் புகலிடமாக சரணாலயாமாக மேற்கு வங்க மாநிலம் மாற்றபட்டுவிட்டதை அன்றாட செய்திகள் மூலம் அறியலாம்.
அந்த வகையில் சந்தேஷ்காளி பகுதியை சேர்ந்த ஷேக் ஷாஜஹான் என்ற நபர் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து திரிணாமுல் காங்கிரசுக்கு தாவி சந்தேஷ்காளி பகுதியில் ஆகபெரும் தலைவராக உருவெடுத்துள்ளார்.
ஆரம்பத்தில் மீன்பிடி தொழிலில் இருந்த ஷேக் ஷாஜஹான் திரிணாமுல் காங்கிரசின் பின்புலத்தில் அரசியல் தாதாவாக உருவெடுத்து பட்டியல் சமூகத்தினர்களின் நிலங்களை பறித்து அதில் இரால் பண்ணைகளை அமைத்து அந்த நிலங்களில் உரிமையாளர்களான பட்டியல் சமூகம் மற்றும் பட்டியல் பழங்குடி சமூகத்தினரை அவர்களின் சொந்த நிலங்களில் கொத்தடிமைகளாக வேலைக்கு வைத்து கூலி கூட வழங்காமல் கொடுமை செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதற்கெல்லாம் மேலாக ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது கும்பல் அரங்கேற்றிய பெண்கள் மீதான வன்முறையும் பாலியல் வன்முறையும் சினிமாவை மிஞ்சும் வகையில் இருப்பதை பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவிக்கும் சம்பவங்களே சாட்சி இந்த கொடூரம் சந்தேஷ்காளி பகுதியை சேர்ந்த 13 ஊராட்சிகள் வரை நீண்டுள்ளது.
கல்வி அறிவும் போதிய விழிப்புணர்வும் அற்ற பழங்குடி பட்டியல் சமூக மக்களின் அறியாமையை பயன்படுத்திகொண்ட ஷேக் ஷாஜஹான் மற்றும் அவரது கும்பல் மேற்படி 13 கிராமங்களில் இரவில் எந்த வீட்டுக்குள்ளும் நுழைந்து இளம் பெண்களை தூக்கி சென்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்திலேயே வைத்து கூட்டு பாலியல் வன்புனர்ச்சியில் ஈடுபட்டுவதும் பெண்களை பாலியல் அடிமைகளாக பயன்படுத்தி வந்ததும் அங்கிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கிறது.
இந்த கொடுமைகள் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நடந்துகொண்டிருந்தாலும் சம்பந்தபட்ட கிராம நிர்வாக அலுவலர் முதலாக அந்த பகுதி காவல்நிலைம், வருவாய் துறை, மாநில மகளிர் ஆணையம் போன்ற எந்தவிதமான அரசு எந்திரத்தின் புலனுக்கும் அறியாமல் நடந்துகொண்டிருந்தது என்றால் அந்தளவுக்கு சட்டத்தின் ஆட்சி செயலிழந்து அரசு எந்திரம் முற்றிலும் முடங்கிபோனது தெளிவாகிறது.
பாதிக்கப்பட்ட பெண்கள் போராட்டம் நடத்துகையில் அவர்களை சந்தித்த காவல் துறை டிஐஜி போராட்டம் நடத்துபவர்களை கலைந்து செல்லுமாறும் இல்லாவிட்டால் வீடு தீக்கிரை ஆகும் உங்கள் வீட்டு ஆண்கள் காணாமல் போகலாம் என்று போராடுபவர்களை மிரட்டும் தொனியில் பேசுவது ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
நில அபகரிப்பு, கொத்தடிமை முறை, ரவுடியிசம் கட்டபஞ்சாயத்து கூட்டு பாலியல் வல்லுறவு போன்ற கொடூரங்களை வெளியில் தெரியாமல் அரசு எந்திரத்தை முடக்கிய ஷேக் ஷாஜஹான் ரேஷன் அரிசியை பங்களாதேசுக்கு கடத்தியது மற்றும் சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கதுறை விசாரிக்க சென்றபோது, ஷேக் ஷாஜஹான் ஆதராவாளர்கள் அமலாக்க துறை அதிகாரிகள் மீது கொடூர தாக்குதல் நடத்தியதான விளைவாக மத்திய அரசு தலையிட்டதால் ஷேக் ஷாஜஹானும் அவனின் கும்பலும் தலைமறைவானார்கள் அதன்பிறகே ஷேக் ஷாஜஹானின் பத்தாண்டுகால கொடூரங்கள் வெளிவந்திருக்கிறது.
ஷேக் ஷாஜஹானின் கொடுரங்களை எதிர்த்து தைரியம் கொண்ட சிலர் காவல்துறையில் புகார் கொடுத்தாலும் வழக்கு பதிந்து விசாரனை செய்து ஆதாரம் திரட்டி நடவடிக்கை எடுக்கவேண்டிய காவல்துறை புகார் கொடுப்பவர்களிடமே ஆதாரம் கேட்டு மிரட்டி திருப்பி அனுப்பியுள்ளது.
தற்போதும் கூட்டுபாலியல் கொடூரத்தில் பாதிக்கபட்ட பெண்கள் புகார் கொடுக்க சென்றால் ஆதாரம் கேட்டும் மருத்துவ சான்றிதழ் கேட்டும் பாதிக்கபட்ட பெண்களை மிரட்டியுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்கள் ஊடகங்கள் முன்பு கூறியிருக்கிறார்கள். பட்டியல் சமுதாய பெண்களை கூட்டுபாலியல் வன்கொடுமை செய்தும் அவர்களின் சொத்துகளை அபகரித்த தன் கட்சி முக்கிய பிரமுகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஷேக் ஷாஜஹான் மீது உடனடி நடவடிக்கை எடுத்து கைது செய்ய முனைப்பு காட்டாமல் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கள்ள மவுனம் காப்பது பெண்ணே ஆட்சி நடத்தியும் பெண்களின் நரகமாக சந்தேஷ்காளி மாறியிருப்பதை எடுத்துக்காட்டுகிறது குற்றவாளியை காப்பாற்ற பாதிக்கபட்டவர்களின் குரல்வளையை நெரிக்க மாவட்டம் முழுக்க 144 தடை உத்தரவை அமுல்படுத்தியுள்ளார்.
அந்த உத்தரவை மேற்குவங்க மாநில உயர்நீதிமன்றம் ரத்து செய்த பின்னரும் சட்டத்தை வளைத்து உயர்நீதிமன்ற உத்தரவை நீர்த்துபோக செய்யும் வகையில் 13 கிராமங்களிலும் தனிதனியாக 144 தடை உத்தரவை அமுல்படுத்தியுள்ளார், அந்த வகையில் நவகாளி படுகொலைகளுக்கு காரணமான ஹுசேன் சுஹ்ரபோர்த்தியை நினைவுபடுத்துகிறார் முதல்வர் மமதா பானர்ஜி.
இந்த நிலையில், நேரிடையாக களமிறங்கிய தேசிய பட்டியல் சமுதயாய ஆணையம் நேரிடை விசாரணை நடத்தி அரசு எந்திரம் செயலற்று முடங்கியிருப்பதையும் அரசியலமப்பு உறுதி செய்யும் அடிப்படை உரிமைகள் மீறபட்டு சட்டத்தின் ஆட்சி முடக்கபட்டிருப்பதையும் உறுதி செய்து மாநில அரசை உடனடியாக கலைக்குமாறு அறிக்கை கொடுத்துள்ளது.
மேற்குவங்கத்தில் அனைத்து எதிர்கட்சிகளும் ஓரணியாக திரண்டு பாதிக்கபட்டவர்களுக்கு நியாயம் கேட்டு போராடும் வேளையில் பாஜக ஆளும் மாநிலங்களில் நடக்கும் பிரச்சனைகளுக்கு கடும் நடவடிக்கை எடுத்த பின்னரும் கண் காது மூக்கு வைத்து ஊதிபெரிதாக்கி மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி, கண்டன ஆர்பாட்டம், போராட்டம் என அதகளபடுத்தும் மகளிர் அமைப்புகளும் திமுகவின் கனிமொழி அவர்களும் பேரமைதியில் இருப்பது அரசியல் ஆதாயம் மட்டுமே.
குற்றவாளிகளுக்கு ஆதரவாக மவுனம் காக்கிறார்கள் என்பதையும் தெளிவுபடுத்துகிறது ஆகவே இந்த தேசம் முழுவதும் ஓரணியில் திரண்டு சந்தேஷ்காளி பெண்களுக்கு நீதி பெற்று தர வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளார்.