இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்று, 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றது!
Sep 12, 2026, 09:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்று, 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றது!

Murugesan M by Murugesan M
Feb 26, 2024, 01:32 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இங்கிலாந்திற்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்று கைப்பற்றியுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது.

இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 353 ரன்கள் குவித்தது. பின்னர் வந்த இந்திய அணி 307 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில், அறிமுக வீரர் துருவ் ஜூரெல் 90 ரன்கள் குவித்து 10 ரன்களில் சதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டைவிட்டார். இதையடுத்து 46 ரன்கள் முன்னிலையில் இங்கிலாந்து 2ஆவது இன்னிங்ஸை விளையாடியது.

இதில் 145 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்கள் முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து 192 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இந்திய அணி விளையாடியது. மூன்றாம் நாள் முடிவில் இந்திய அணி 40 ரன்கள் எடுத்த நிலையில், இன்றைய 4ஆம் நாள் ஆட்டத்தைத் இன்று தொடங்கியது.   இந்திய அணி தொடக்கத்தில்  விளையாடி நிலையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

நன்றாக விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 37 ரன்கள் எடுத்த நிலையில் ஜோ ரூட் பந்தில் ஆட்டமிழந்தார். ஜெய்ஸ்வால் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஆண்டர்சன் டைவ் அடித்து பிடித்து அசத்தினார்.  இவரைத் தொடர்ந்து கேப்டன் ரோகித் சர்மாவும் இறங்கி அடிக்க முயற்சித்து டாம் ஹார்ட்லி பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து வந்த ரஜத் படிதார் ரன் ஏதும் எடுக்காமல் சோயிப் பஷீர் பந்தில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த ரவீந்திர ஜடேஜாவும் 4 ரன்களில் பஷீர் பந்தில் ஆட்டமிழந்து நடையை கட்டினார். அதே ஓவரின் அடுத்த பந்தில் சர்ஃபராஸ் கான் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார்.

சீரான இடைவெளியில் இந்திய வீரர்கள் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்து வந்த நிலையில் சுப்மன் கில் மற்றும் துருவ் ஜூரெல் இருவரும் நிதானமாக விளையாடி ரன்கள் குவித்தனர்.

இதில், 39 ரன்கள் வரையில் கில் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. இந்திய அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவையாக இருந்த போது பஷீர் ஓவரில் 2 சிக்ஸர்களை பறக்க விட்டு தனது அரைசதத்தை பதிவு செய்தார்.

இதையடுத்து ஜூரெல் பவுண்டரி அடிக்கவே, கடைசியாக 2 ரன்கள் எடுத்து இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றது.

இங்கிலாந்திற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்று இந்தியா வென்று புதிய சாதனை படைத்துள்ளது.

Tags: india vs englandtest matchindia won cricket match
Share
Tweet
SendShare
Previous Post

சந்தேஷ்காளி பெண்களுக்கு தேவை நீதி !- இந்து முன்னணி ஆவேசம்!

Next Post

இந்தியாவை உலகளாவிய ஏற்றுமதி மையமாக மாற்றுவோம் : பிரதமர் மோடி உறுதி!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies