இந்தியாவை உலகளாவிய ஏற்றுமதி மையமாக மாற்றுவோம் : பிரதமர் மோடி உறுதி!
Sep 12, 2026, 10:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவை உலகளாவிய ஏற்றுமதி மையமாக மாற்றுவோம் : பிரதமர் மோடி உறுதி!

Murugesan M by Murugesan M
Feb 26, 2024, 01:33 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவை உலகளாவிய ஏற்றுமதி மையமாக மாற்றுவோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மத்திய ஜவுளி வர்த்தக அமைச்சகம் சார்பில், ‘பாரத் டெக்ஸ் – 2024 கண்காட்சி’இன்று (பிப்.,26) முதல் மார்ச் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனை பிரதமர் மோடி திறந்து வைத்து உரையாற்றினார்.

அப்போது, பாரதத்தை உலகளாவிய ஏற்றுமதி மையமாக மாற்றுவோம் என்பதில் எங்களுக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது. கடந்த பத்தாண்டுகளில்,  Vocal for Local என்பதற்கு மற்றொரு புதிய பரிமாணத்தைச் சேர்த்துள்ளோம். இன்று, Local to Global என்ற பொது இயக்கம் நடந்து வருகிறது.

அடுத்த 25 ஆண்டுகளில் பாரதத்தை ‘விக்சித் ராஷ்டிரா’வாக மாற்ற  தீர்மானித்துள்ளோம். விக்சித் பாரதத்தின் நான்கு முக்கிய தூண்கள் ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பெண்கள். மேலும் குறிப்பாக, பாரதத்தின் ஜவுளித் துறை இந்த அனைத்துத் தூண்களுடனும் இணைக்கப்பட்டுள்ளது என்றார்.

அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகள் இந்தியாவின் ஜவுளித் துறையில் அன்னிய முதலீடுகளை அதிகரிக்க செய்வதாக பிரதமர் கூறினார். ஜவுளித் துறையில் 2014-ம் ஆண்டுக்கு முன்பு இருந்த அந்நிய நேரடி முதலீடு இன்று இரட்டிப்பாகியுள்ளது. ஜவுளித் துறையை கட்டியெழுப்புவதில் அரசு எடுத்துள்ள முயற்சிகளை எடுத்துரைத்த அவர், தரக் கட்டுப்பாட்டில் கவனம் செலுத்துவதாகக் கூறினார்.

ஜவுளித் துறையில் நிலையான மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட அரசாங்கத்தின் முயற்சியால் ஏற்பட்ட நேர்மறையான தாக்கங்களை நன்றாகக் காணலாம். 2014ல், இந்திய ஜவுளிச் சந்தையின் மதிப்பீடு, 7 லட்சம் கோடி ரூபாய்க்கும் குறைவாக இருந்தது. இன்று, 12 லட்சத்தைத் தாண்டியுள்ளது என பிரதமர் தெரிவித்தார்.

கடந்த 10 ஆண்டுகளில், நூல், துணி, மற்றும் ஆடை உற்பத்தி 25 சதவீதம் உயர்ந்துள்ளது. ஜவுளித் துறையில் தரக் கட்டுப்பாட்டில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்துகிறது.தொழில்துறையில் பெண் தொழிலாளர்களை வலுப்படுத்துவதில் காதி எவ்வாறு பங்கு வகித்தது என்பதை பிரதமர் மோடி விவரித்தார்.

கடந்த 10 ஆண்டுகளில் நாம் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் காதியை வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய இரண்டிற்கும் வழிவகை செய்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இன்று, பருத்தி, சணல் மற்றும் பட்டு உற்பத்தியில் உலகிலேயே அதிக உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்றும், லட்சக்கணக்கான விவசாயிகள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

இன்று அரசாங்கம் லட்சக்கணக்கான பருத்தி விவசாயிகளுக்கு ஆதரவளிக்கிறது, அவர்களிடமிருந்து லட்சக்கணக்கான குவிண்டால் பருத்தியை கொள்முதல் செய்கிறது. அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட கஸ்தூரி பருத்தி இந்தியாவின் சொந்த அடையாளத்தை உருவாக்குவதற்கான ஒரு பெரிய படியாக இருக்கும் என்று பிரதமர் கூறினார்.

Tags: PM ModiModiGlobal Export HubBharat Tex 2024
Share
Tweet
SendShare
Previous Post

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்று, 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றது!

Next Post

பிரதமர் மோடிக்கு ஆளுநர் ரவி நன்றி!

Related News

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies