பல்வேறு ரயில்வே திட்டங்களை தொடங்கிவைத்த பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று சுமார் 41,000 கோடி ரூபாய் மதிப்பிலான 2000 ரயில்வே உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும், நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
மேலும் லக்னோவில் உள்ள கோமதி நகர் ரயில் நிலையம் உட்பட, அமிர்த் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் 553 ரயில் நிலையங்களை மறுவடிவமைப்பு செய்ய பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்வில் பங்கேற்ற பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இது குறித்து நிகழ்வில் பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்,
“பிரதமர் மோடி இன்று சுமார் 41,000 கோடி ரூபாய் மதிப்பிலான 2000 ரயில்வே உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார் மற்றும் அடிக்கல் நாட்டினார். இது லக்னோ மக்களுக்கு ஒரு சிறப்பு நாள், கோமதி நகர் ரயில் நிலையம் உலக அளவிலான ரயில் நிலையமாக தயாராக உள்ளது. இன்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதற்காக பிரதமர் மோடிக்கும், ரயில்வே அமைச்சருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.