தமிழ்நாட்டில் 34 இரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.
இந்தியாவின் எதிா்கால வளா்ச்சியைக் கருத்தில் கொண்டு ‘அம்ரித் பாரத் இரயில் நிலையம்’ என்ற திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் தமிழகம் உள்பட 554 ரெயில் நிலையங்களை மேம்படுத்த பாரதப் பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.
குறிப்பாக, சென்னை கடற்கரை, பூங்கா, அம்பத்தூர், பரங்கிமலை, கிண்டி மற்றும் மாம்பலம் இரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன.
இதேபோல, மேட்டுப்பாளையம், கோவை வடக்கு, ஈரோடு, மொரப்பூர், திண்டுக்கல் மற்றும் தூத்துக்குடி இரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன.
மேலும், திருச்செந்தூர், மயிலாடுதுறை, கும்பகோணம், விருத்தாசலம், தருமபுரி மற்றும் ஒசூர் இரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன.
மேலும், 1,500 சாலை மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப் பாதைகளுக்கும் அடிக்கல் நாட்டினார். ஆகமொத்தம் ரூ.41 ஆயிரம் கோடி செலவில் இந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இதில் 121 சாலை மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப் பாதைகள் தமிழகத்தில் அமைய உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.