அரசியலுக்கு பலியாகி இருந்த ரயில்வே துறை, தற்போது எளிதாக பயணிக்கிறது : பிரதமர் மோடி 
Oct 17, 2026, 09:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசியலுக்கு பலியாகி இருந்த ரயில்வே துறை, தற்போது எளிதாக பயணிக்கிறது : பிரதமர் மோடி 

Murugesan M by Murugesan M
Feb 26, 2024, 03:22 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அரசியலுக்கு பலியாகி இருந்த ரயில்வே துறை3,  தற்போது எளிதாக பயணிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று சுமார் 41,000 கோடி ரூபாய் மதிப்பிலான 2000 ரயில்வே உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும்,  நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

நாட்டில் முக்கிய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களின்  எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு அம்ரித் பாரத் ரயில் நிலையம் திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன. முதல்கட்டமாக கடந்த ஆண்டில் 508 ரயில் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மேம்படுத்துவதற்கான பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில்,  நாடு முழுவதும் சுமார் 41,000 கோடி ரூபாய் மதிப்பிலான 2000 ரயில்வே உள்கட்டமைப்புத் திட்டங்களை வீடியோ கான்பரன்சிங் வாயிலாக தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும்,  நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

தமிழகத்தில் சென்னை கடற்கரை, பூங்கா, அம்பத்தூர், பரங்கிமலை, கிண்டி, மாம்பலம், மேட்டுப்பாளையம், கோவை வடக்கு, ஈரோடு, மொரப்பூர், திண்டுக்கல், தூத்துக்குடி,  திருச்செந்தூர், மயிலாடுதுறை, கும்பகோணம், விருத்தாச்சலம், தர்மபுரி, ஒசூர் உள்ளிட்ட 34 ரயில் நிலையங்கள் உலகத்தரத்தில் மேம்படுத்தப்பட உள்ளன.

விழாவில் பேசிய பிரதமர் மோடி, பாரதம் தற்போது பெரிய கனவுகளை காண்கிறது. அதனை அடைய இரவும் பகலும் உழைக்கிறது என தெரிவித்தார்.

கடந்த 10 ஆண்டுகளில் புதிய இந்தியா கட்டப்படுவதை மக்கள் பார்த்துள்ளனர். வந்தே பாரத் ரயில்கள் தொடங்குதல், தூய்மை மற்றும் தண்டவாளங்களை மின்மயமாக்குதல் உள்ளிட்ட ரயில்வேயில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை சுட்டிக்  காட்டினார்.

முந்தைய அரசாங்கங்கள் பொதுப்பணத்தை கொள்ளை அடித்ததாகவும், அது பாஜக ஆட்சியில் நிறுத்தப்பட்டு   சம்பாதித்த ஒவ்வொரு பைசாவும் ரயில்வே சேவைகளை விரிவுபடுத்தப் பயன்படுத்தப்பட்டதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

இந்திய ரயில்வே துறை அரசியலுக்கு பலியாகி இருந்தது, ஆனால் தற்போது அதுவே எளிதாகப் பயணம் செய்வதற்கான முக்கிய அடிப்படையாக உள்ளது என்றும், அது ஒரு பெரிய வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனமாக உள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

இளைஞர்களின் கனவுகளும், கடின உழைப்பும் எனது உறுதியும் விக்சித் பாரத் உத்தரவாதம் என்றும் அவர் கூறினார்.

இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள் அஸ்வின் வைஷ்ணவ்,  ராவ் சாககேப் பாட்டில் தன்வே, தர்ஷனா ஜர்தோஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாடு முழுவதும் மாநில ஆளுநர்கள், முதலமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள்  கலந்து கொண்டனர். சென்னை பரங்கிமலையில் நடைபெற்ற த விழாவில் தமிழக ஆளுநர்  ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.

Tags: PM ModiNarendra Moditamilnadubjp governmentRail infra projects
Share
Tweet
SendShare
Previous Post

தமிழகத்தில் 34 இரயில் நிலையங்கள் நவீனமயம்! – அடிக்கல் நாட்டிய மோடி!

Next Post

22 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த தீவிரவாதி கைது!

Related News

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

Load More

அண்மைச் செய்திகள்

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies