தமிழகத்தில் 11 கல்லூரிகளில் செவிலியர் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை வரும் கல்வி ஆண்டில் கிடையாது எனத் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில், பி.எஸ்.சி. நர்சிங் படிப்பில் செவிலியர் கல்லூரிகள் தொடங்குவதற்குக் கடந்த ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஆனால், அதற்கான கட்டுமானப் பணிகள் இன்னும் துவங்கப்படவில்லை. கட்டுமான பணிகள் அனைத்தும் முடிந்த பின்னரே செவிலியர் படிப்பில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.
எனவே, புதிதாகத் துவக்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளிலும் வரும் கல்வி ஆண்டில் பி.எஸ்.சி நர்சிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெறாது என்று தெரிவித்தார்.
சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டியூட் மைதான வளாகத்தில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இதனைத் தெரிவித்துள்ளார்.