பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை இந்திய கடற்படையின் முதன்மை ஆயுதமாக இருக்கும் என்று இந்திய கடற்படைத் தளபதி ஹரி குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய பாதுகாப்பு துறை அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், இந்திய கடற்படைக்காக ரூ.19,000 கோடியில் மேம்படுத்தப்பட்ட 200 பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் இடையே மார்ச் முதல் வாரத்தில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இந்திய கடற்படை போர்க்கப்பல்களில் ஏற்படும் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு பிரம்மோஸ் ஏவுகணை முக்கிய ஆயுதமாக கருதப்படுகிறது.
இந்நிலையில், புனேவில் பாதுகாப்பு கண்காட்சியின் நிறைவு விழாவில் இந்திய கடற்படைத் தளபதி கலந்து கொண்டார். அப்போது, பிரம்மோஸ் ஏவுகணை பற்றி கூறினார்.
பிரம்மோஸ் ஏவுகணை இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட, மிக சக்திவாய்ந்த ஏவுகணை ஆகும். எனவே, நாம் மற்ற நாடுகளை சார்ந்திருக்க தேவையில்லை. உள்நாட்டிலேயே தேவையான உதிரிபாகங்களை தயாரித்துக் கொள்ளலாம் என்று கூறினார்.