மக்களவை தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக இந்தியன் வங்கிகள் கூட்டமைப்பு மற்றும் அஞ்சல்துறையுடன் தலைமை தேர்தல் ஆணையம் புரிந்துணர்வு ஒப்பந்தம் த்தில் செய்துள்ளது.
2024 மக்களவை தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக இந்தியன் வங்கிகள் கூட்டமைப்பு, அஞ்சல் துறை தலைமை தேர்தல் ஆணையம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இதுதொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தேர்தல் மற்றும் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இந்தியன் வங்கிகள் கூட்டமைப்பு மற்றும் அஞ்சல் துறை அதன் உறுப்பினர்கள் மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்கள் மூலம் பணிகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மார்ச் மாதம் முதல் வாரத்தில் துணை ராணுவம் தமிழகம் வர உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,திருக்கோவிலூர் மற்றும் விளவங்கோடு சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளது தொடர்பான தகவல்கள் தலைமை செயலகத்தில் இருந்து இதுவரை கிடைக்கவில்லை என தெரிவித்தார்.
மக்களவை தேர்தலை ஒட்டி மார்ச் முதல் வாரத்தில் துணை ராணுவம் தமிழகம் வருகிறது. அடுத்த வாரம் 200 கம்பெனி துணை ராணுவப்படையினர் 2 கட்டங்களாக தமிழகம் வருகை தர உள்ளனர். கடந்த தேர்தலில் 160 கம்பெனி துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார்.