மதுரையில் அருள்மிகு மீனாட்சியம்மன் கோவிலை சுற்றி கட்டப்பட்ட விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிகாரிகளுக்குச் சரமாரிக் கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரையில் அருள்மிகு மீனாட்சியம்மன் கோவிலை சுற்றி ஏராளமான விதிமீறல் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கில், அதிகாரிகளுக்கு நீதிபதிகள் சரமாரிக் கேள்வி எழுப்பியுள்ளனர். அதில், விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் 10 ஆண்டுகளாக அதிகாரிகள் என்ன செய்தார்கள்? ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனரா? என்றும், மதுரை மீனாட்சியம்மன் கோவிலை சுற்றி கட்டிடங்கள் கட்ட மதுரை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் உள்ளூர் திட்டக்குழுமம் கொடுத்த அனுமதி எத்தனை? என்றும் கேள்வி எழுப்பினர்.
மேலும், மதுரை மீனாட்சியம்மன் கோவிலைச் சுற்றி உள்ள விதிமீறல் கட்டிடங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.