இந்தியாவில் வறுமை 5 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளதாக நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ், இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் உட்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் வறுமையை ஒழிக்க பாரத பிரதமர் நரேந்திர பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதனால், இந்தியர்கள் அனைவரும் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டுள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் வறுமை 5 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளதாக நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 2022-ஆம் ஆண்டு முதல் ஜூலை 2023-ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்ட நுகர்வோரின் செலவினம் தொடர்பான கணக்கெடுப்பை நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி சுப்பிரமணியன் மேற்கோள் காட்டி கூறியிருப்பதாவது:
இந்தியாவில் வறுமை 5 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. கிராமங்கள் மற்றும் நகரங்களில் வசிக்கும் மக்கள் செழிப்பாக மாறி வருகின்றனர். வீடுகளில் நுகர்வு தொடர்பான தரவுகள் மூலம் நாட்டின் வறுமை நிலையை மதிப்பிட முடிகிறது.
வறுமை ஒழிப்பு நடவடிக்கையில் மட்டுமே நாம் வெற்றியை உணர்ந்திடலாம். கிராமப்புறம் மற்றும் நகர்புறத்தில் நுகர்வு 2.5 மடங்கு அளவில் அதிகரித்துள்ளது. நகர்ப்புற குடும்பங்களில் சராசரி மாதாந்திர தனிநபர் நுகர்வுச் செலவு 2011-12 ஆம் ஆண்டில் இருந்து 33.5 சதவீதம் உயர்ந்து ரூ.3,510 ஆக உள்ளது என்று கூறினார்.