பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின்படி, உள்துறை அமைச்சகம் போதைப் பொட்களுக்கு எதிரான நடவடிக்கைகளை விரைவுபடுத்தி வருகிறது.
இந்தியாவில் போதைப் பொருள் வணிகத்தை அனுமதிப்பதில்லை என்பதைப் போலவே, இந்தியா மூலம் உலகத்திற்குப் போதைப் பொருள் கடத்துவதையும் அனுமதிப்பதில்லை என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது.
கடந்த 2006-2013 காலகட்டத்தில் ரூ.768 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 2014-2022 காலகட்டத்தில் ரூ.22,000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது போதைப் பொருள் இல்லாத இந்தியாவை மோடி அரசு உருவாக்கி வருகிறது என்பதற்குச் சான்றாகும்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்கள், மீண்டும் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கான இயக்கம் 2022 ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டு இதுவரை நாடு முழுவதும் சுமார் 6 லட்சம் கிலோ போதைப் பொருள்கள் அழிக்கப்பட்டுள்ளன.
போதைப் பொருள்கள் இளைய தலைமுறையையும் சமூகத்தையும் சீரழிப்பது மட்டுமின்றிப் போதைப் பொருள் கடத்தலால் ஈட்டப்படும் பணம் நாட்டின் பாதுகாப்புக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது. இதனாலேயே, போதைப் பொருட்கள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. குற்றவாளிகளை உடனுக்கு உடன் பிடித்துக் கைது செய்து சட்டத்தின்முன் கொண்டு நிறுத்திவிடுகிறது. இதனால், காங்கிரஸ் ஆட்சியில் நடந்த போதைப் பொருட்கள் கடத்தல் தற்போது பன்மடங்கு குறைந்துள்ளது.
ஆனால், தமிழகத்தில், தி.மு.க ஆட்சி அமைந்தது முதல் போதைப் பொருட்கள் கடத்தல் தங்கு தடையின்றி நடைபெற்று வந்தது. போதைப் பொருள் கடத்துபவர்கள், விற்பவர்கள், பதுக்குபவர்கள் சுதந்திரமாக நடமாடி வந்தனர்.
இச்செயலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்க வேண்டும், அதோடு அவர்களது பெயரிலும், பினாமி பெயர்களிலும் வாங்கிக்குவித்துள்ள சொத்துகளை அடையாளம் கண்டு பறிமுதல் செய்ய வேண்டும், வங்கிக் கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு கறார் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில் தமிழக காவல் துறையின் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீசார் மாநிலம் முழுவதும் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி இதுவரையில் போதைப் பொருள் விற்பனைத் தொடர்பாக 358 பேரைக் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து பல கோடி மதிப்புள்ள 1,486 கிலோ கஞ்சா, 2,200 போதை மாத்திரைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில்தான், 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருள் கடத்தல் விவகாரத்தில், திரையுலகைச் சேர்ந்தவரும், தி.மு.க-வைச் சேர்ந்த அயலக அணியின் நிர்வாகி ஜாபர் சாதிக் சிக்கியுள்ளார். சத்துமாவு என்ற பெயரில் வெளிநாடுகளுக்குப் போதைப் பொருட்கள் கடத்தியதை டெல்லி போலீசார் கண்டறிந்துள்ளனர். மேலும், இது தொடர்பாக 3 பேரை கைது செய்துள்ளனர். இதில், முக்கியக் குற்றவாளியான தி.மு.க-வின் சேர்ந்த அயலக அணியின் நிர்வாகி ஜாபர் சாதிக் தலைமறைவு ஆனதால், அவரைப் பிடிக்கும் பணியில் டெல்லி போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், டெல்லியில் உள்ள போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராகச் சம்மன் அனுப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள மயிலாப்பூர் டொம்மிங் குப்பம் ஜாபர் வீட்டில் சம்மனை அதிகாரிகள் ஒட்டிச் சென்றனர்.
அதுபோல, சென்னை புரசைவாக்கம் டவுட்டன் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக்கின் சினிமா தயாரிப்பு நிறுவன அலுவலகத்திலும் சம்மன் ஒட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர் ரஹ்மான் மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக் குமார் ஆகியோரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
போதை பொருள் கடத்தல் மன்னன், ஜாபர் சாதிக் மட்டுமல்லாமல், அவருடன் தொடர்பில் இருந்த சினிமா பிரபலங்களையும் டெல்லி போலீசார் வளைத்துள்ளனர். இதில் தொடர்புடைய அரசியல் புள்ளிகள் லிஸ்ட்டும் மத்திய உளவுத்துறையினர் தயார் செய்துள்ளனர். அவர்களிடம் ரகசிய விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், திமுகவினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உண்மை ஒரு நாள் வெளிவந்துதானே ஆகவேண்டும்.