பாலஸ்தீனத்தின் பிரதமர் முகம்மது ஷ்டய்யே தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை பாலஸ்தீன அதிபர் மகமூத் அப்பாஸிடம் கொடுத்துள்ளார்.
பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரை இஸ்ரேல் தொடங்கியது. இந்த போரில் விமானப்படை, கப்பல்படை, தரைப்படை என முப்படைகளையும் ஏவிவிட்டு நடத்தி வரும் தாக்குதலில் காஸா நகரமே உருக்குலைந்து போய்க் கிடக்கிறது.
இந்த போரில் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு சரியான பதிலடியை இஸ்ரேல் கொடுத்து வருகிறது. இருநாட்டு தரப்பிலும் அப்பாவி மக்கள் உட்பட ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், பாலஸ்தீன பிரதமர் முகமது ஷ்டய்யே தனது பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை பாலஸ்தீன அதிபர் மகமூத் அப்பாஸிடம் கொடுத்துள்ளார்.
தனது தலைமையிலான அரசை கலைத்துவிட்டு, புதிய அரசு பொறுப்பேற்க பிரதமர் முகமது ஷ்டய்யே விருப்பம் தெரிவித்துள்ளார்.
காஸா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதல் காரணமாக, இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், பாலஸ்தீனியத்தை நிர்வகிக்க புதிய அரசு அமைவதே சிறந்ததாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.