வியாட்நாம் நாட்டில் மறுவாழ்வு மையத்தில் ஏற்பட்ட கலவரத்தின் போது, காவலர்களை தாக்கி விட்டு தப்பி சென்ற 100 போதை அடிமைகளை போலீசார் தேடி வருகின்றனர்.
உலகம் முழுவதும் போதைப்பொருள் அதிகரித்துள்ளது. சில இளைஞர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகி உள்ளனர். இளைஞர்களை போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து வெளியே கொண்டு வர பல்வேறு நாடுகளும் முயற்சி செய்து வருகின்றனர்.
அந்த வகையில், வியட்நாமில் போதை மருந்துகளுக்கு அடிமையானவர்களை, அதில் இருந்து மீட்டு மறுவாழ்வு அளிப்பதற்காக அரசு சார்பில் பல்வேறு மறுவாழ்வு மையங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
ஆனால், இந்த மையங்களில் போதிய உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் இல்லை என்று கூறப்படுகிறது. இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் தப்பிச் செல்லும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.
இதற்கிடையே, மேகாங் டெல்டா பகுதியில் உள்ள மறுவாழ்வு மையத்தில் கடந்த சனிக்கிழமை இரவு தகராறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, மறுவாழ்வு மையத்தில் இருந்து 191 பேர் தப்பிச் சென்றுள்ளனர். அவர்கள் அறைகளின் கதவை உதைவிட்டு. காவல்களை தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
அவர்களில், 94 பேர் கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் போதை மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு வரப்பட்டனர். சுமார் 100 பேரை போலீசார் மற்றும் குடும்பத்தினர் தேடி வருகின்றனர்.