விண்வெளிக்கு செல்லும் இந்திய வீரர்கள் : அறிமுகம் செய்தார் பிரதமர் மோடி!
Jul 2, 2025, 11:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விண்வெளிக்கு செல்லும் இந்திய வீரர்கள் : அறிமுகம் செய்தார் பிரதமர் மோடி!

Web Desk by Web Desk
Feb 27, 2024, 02:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளி செல்லும் 4 வீரர்களை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் கேரளா, தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

மேலும் அவர் ரூ.24,000 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு வைக்கவுள்ளார். இந்நிலையில் இன்று கேரளாவிற்கு சென்ற பிரதமர் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திற்கு சென்று பார்வையிட்டார்.

மேலும் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் பிஎஸ்எல்வி ஒருங்கிணைப்பு வசதி (PIF) உள்ளிட்ட விண்வெளி உள்கட்டமைப்பு திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

அப்போது, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளி செல்லும் 4 வீரர்களை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார்.

அதன்படி, குரூப் கேப்டன்கள் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் மற்றும் விங் கமாண்டர் சுபான்ஷு சுக்லா ஆகியோர் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளி செல்ல உள்ளனர்.

இவர்கள் கடந்த ஆறு ஆண்டுகளாக விண்வெளி செல்வதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் இன்றைய விழாவில் இந்த நால்வருக்கும் மிஷன் லோகோவை பிரதமர் மோடி வழங்கினார்.

பின்னர் விழாவில் பேசிய பிரதமர் மோடி, “இந்த நால்வரும் சாதாரண மனிதர்கள் அல்ல. 140 கோடி இந்தியர்களின் கனவுகளை விண்வெளிக்கு எடுத்துச் செல்லப் போகும் நான்கு சக்திகள். 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியர் ஒருவர் விண்வெளிக்கு செல்கிறார்.

இந்த முறை நேரமும் நமதே, கவுண்டவுன் நமதே, ராக்கெட்டும் நமதே. இன்று இந்த 4 விண்வெளி வீரர்களைச் சந்தித்து அவர்களை நாட்டுக்கு அறிமுகம் செய்து வைக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர்களுக்கு இந்தியாவின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய இந்தியாவின் பெருமை நீங்கள்தான்.

ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிப் பயணத்திலும், நிகழ்காலத்தை மட்டுமல்ல, அதன் வருங்கால சந்ததியினரின் எதிர்காலத்தையும் வரையறுக்கும் சில தருணங்கள் உள்ளன. இன்று இந்தியாவிற்கு அது போன்ற ஒரு தருணம்” என்று கூறினார்.

Tags: PM ModiIndian soldiers going to space: Prime Minister Modi introduced!
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் நரேந்திர மோடியின் நேர்மையான நல்லாட்சி தமிழகத்திலும் அமையும்! – அண்ணாமலை

Next Post

மருத்துவமனையில் முகமது ஷமி : விரைவில் குணமடையப் பிரதமர் வாழ்த்து!

Related News

உத்தரபிரதேசம் : யமுனை நதியின் நீர்மட்டம் அதிகரிப்பு!

இன்றைய தங்கம் விலை!

பொன்னேரி அருகே திருமணமான 4 நாட்களில் வரதட்சணை கொடுமையால் புதுமணப்பெண் தற்கொலை – கணவர், மாமியார் கைது!

8 நாட்கள், 5 நாடுகள் – வெளிநாடு புறப்பட்டார் பிரதமர் மோடி!

மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 2-வது நாளாக போராட்டம்!

திருத்தணி முருகன் கோயிலில் ரூ. 2 கோடி உண்டியல் காணிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் திமுக அரசு – இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் குற்றச்சாட்டு!

சென்னை திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பார்க்கிங் கட்டணம் வசூல் – பக்தர்கள் குற்றச்சாட்டு!

தரமான கல்விதான் வளமான பொருளாதாரத்தின் அடித்தளத்தை கட்டமைக்கும் – சுவாமி விக்ஞானந்தா

மதுரையில் அர்ச்சனை தட்டு வாங்குவது தொடர்பாக வாக்குவாதம் – திமுக எம்பி மகனை தாக்கியதாக இருவர் கைது!

சென்னையில் பாஜக ஆர்பாட்டம் – நாராயணன் திருப்பதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை வலுக்கட்டாயமாக கைது செய்த போலீஸ்!

திருச்செந்தூர் முருகன் கோயில் யாகசாலை பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு நேரத்தை மாற்றக்கோரிய மனு தள்ளுபடி!

பரமக்குடி – ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

அஜித்குமாரின் உடலில் 44 காயங்கள், கொலை செய்யப்பட்டவர்களின் உடலில் கூட இத்தனை காயங்கள் கிடையாது – மதுரை உயர் நீதிமன்றம் அதிர்ச்சி!

திருப்புவனம் அஜித்குமார் வழக்கு – மதுரை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies