இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் தமிழகம் வந்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் நடைபெறும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் ‘என் மண், என் மக்கள்’ பாதயாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார்.
முன்னதாக திறந்த வெளி வாகனத்தில் பொதுக்கூட்ட மேடைக்கு வருகை தந்த பிரதமர் மோடி, இருபுறமும் திரண்டு இருந்த தொண்டர்களை பார்த்து கை அசைத்தபடி வந்தார். அவருக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வாகனத்தில் பிரதமர் மோடியுடன் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உடன் இருந்தனர்.