மேற்கு வங்க மாநிலத்தில் ராம நவமியின் போது, திட்டமிட்டு இந்துக்கள் மீது தாக்குதல் நடத்திய வன்முறையாளர்கள் 16 பேரை NIA அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள தல்கோலாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ராம நவமியை முன்னிட்டு, ஊர்வலம் நடைபெற்றது. இதில், ஏராளமான இந்துக்கள் பங்கேற்றனர்.
அப்போது, இந்துக்கள் மீது அப்பகுதியில் இருந்த இஸ்லாமியர்கள் சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். கடைகள், போலீஸ் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும், பல இந்துக்கள் காயமடைந்தனர். சில காவலர்களும் காயமடைந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக 162 பேர் மீது அம்மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை NIA-க்கு மாற்றி கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து வன்முறை தொடர்பான வீடியோக்களையும், ஆதாரங்களையும் NIA சேமித்தது. வீடியோவில் பதிவான காட்சிகைளைக் கொண்டு தாக்குதலில் ஈடுபட்ட விஷமிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் ராம நவமியின் போது, திட்டமிட்டு இந்துக்கள் மீது தாக்குதல் நடத்திய வன்முறையாளர்கள் 16 பேரை என்ஐஏ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அஃப்ரோஸ் ஆலம், முகமது அஷ்ரப் என்கிற அஷ்ரப், முகமது இம்தியாஸ் ஆலம் என்கிற இம்தியாஸ், முகமது இர்பான் ஆலம் என்கிற இர்பான், குய்சர், முகமது ஃபரித் ஆலம், முகமது ஃபுர்கான் ஆலம், முகமது, சுஜான், முகமது சுஜான், முகமது சுஜான் நூருல் ஹோடா, வாசிம் ஆர்யா, முகமது வாசிம், முகமது சலாவுதீன், முகமது ஜன்னத், வாசிம் அக்ரம் மற்றும் முகமது தன்வீர் ஆலம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தாக்குதலில் ஈடுபட்ட உள்ளூர் வாசிகள் ஆவர். இவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.