சொத்து குவிப்பு மற்றும் முறைகேடு உள்ளிட்ட விவகாரங்களில் சிக்கிய தி.மு.க-வைச் சேர்ந்த அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆகியோருக்கு எதிராக தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் அவர்களை கிழமை நீதிமன்றம் விடுதலை செய்தது.
இந்த வழக்குகளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டார் சென்னை உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வின் முன்பு விசாரணை நடைபெற வேண்டும் என தி.மு.க அமைச்சர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், இந்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கை விசாரிப்பார் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்தது.
அந்த வகையில் திமுக அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரணை நடத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.
அவரைத்தொடர்ந்து, திமுக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் விடுதலை செய்யப்படதற்கு எதிராக தாமாக வந்து விசாரிக்கும் வழக்கின் இறுதி வாதங்கள் நாளை முதல் தொடங்கும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மேலும், இந்த வழக்குகள் வரும் மார்ச் 11 -ம் தேதிக்குள் அனைத்து வாதங்களும் முடிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.