சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார் நமீபியாவை சேர்ந்த ஜான் நிக்கோல் லோப்டி ஈட்டன் என்ற வீரர்.
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிவேக சதம் அடித்து முந்தைய சாதனைகளை எல்லாம் உடைத்து எறிந்துள்ளார் நமீபியாவை சேர்ந்த ஜான் நிக்கோல் லோப்டி ஈட்டன் என்ற வீரர்.
நேபாளத்தில் முத்தரப்பு டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேபாளம் – நமீபியா அணிகள் விளையாடியது. முதலில் பேட்டிங் செய்த நமீபியா அணி முதல் 10 ஓவர்களில் 60 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது.
அப்போது 11வது ஓவரில் 3 விக்கெட்கள் இழந்த நிலையில் களத்துக்கு வந்தார் ஈட்டன். அதன் பின் ஒவ்வொரு ஓவரிலும் பௌண்டரி மழை பொழிந்த ஈட்டன் 11 ஃபோர், 8 சிக்ஸ் அடித்து தெறிக்கவிட்ட இவர் 33 பந்துகளில் சதம் அடித்தார்.
அதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார் ஈட்டன். இதற்கு முன்பு சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேக சதம் அடித்த பட்டியலில் நேபாள நாட்டின் குஷால் மல்லா 34 பந்துகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
அவருக்கு அடுத்து டேவிட் மில்லர் மற்றும் ரோஹித் சர்மா 35 பந்துகளில் சதம் அடித்து மூன்றாவது இடத்தில் உள்ளனர். அதேபோல் இந்த போட்டியில் 206 ரன்கள் குவித்தது நமீபியா.
அடுத்து பேட்டிங் செய்த நேபாள அணி 18.5 ஓவர்களில் 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் நமீபியா 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.