உலகமே நவீன மயமாகி வரும் இன்றைய காலகட்டத்தில் அனைவரின் கையிலும் உலகமே உள்ளது. ஆம், நாம் வைத்திருக்கும் ஸ்மார்ட் போனை வைத்தே உலகையே காண முடிகிறது.
அந்த ஸ்மார்ட் போனில் பெறும் பங்கு வகிப்பது என்றால் அதில் உள்ள செயலி என்றே சொல்லலாம். அதில் இன்றைய இளைஞர்கள் அதிகம் விரும்பும் செயலி சென்றால் அது இன்ஸ்டகிராம் என்றே சொல்லலாம்.
அந்த அளவில் இன்ஸ்டாகிராம் இளைஞர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நிறைய பயனர்களை கொண்டுள்ள இன்ஸ்டாகிராம் தங்களின் பயனர்களின் வசதிக்காக அடிக்கடி புதிய புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் ‘ஃப்ரெண்ட் மேப்’ (Friend Map) என்ற புதிய வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது கிட்டதட்ட லைவ் லொக்கேஷன் ஷேரிங் அம்சமாகும்.
இன்ஸ்டாகிராம் நண்பர்களுடன் இதை ஷேர் செய்ய முடியும். இந்த அம்சம் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த அம்சம் குறித்து மெட்டா செய்தித் தொடர்பாளர் உறுதிபடுத்தி உள்ளார்.
இந்த வசதியில் பல்வேறு ஆப்ஷன்களும் கொடுக்கப்பட்டுள்ளது. தான் இருக்கும் லொக்கேஷனை யார் பார்க்கலாம், யாருடன் ஷேர் செய்யலாம் உள்ளிட்ட ஆப்ஷன்கள் உள்ளன.
அதோடு ‘Notes’, ‘Ghost Mode’ உள்ளிட்ட ஆப்ஷகள் உள்ளன. ‘Ghost Mode’ பயன்படுத்தி பயனரின் last active location-ஐ hide செய்யலாம். ‘Close friends’ ஆப்ஷன் மூலம் நெருங்கிய நண்பர்கள் லிஸ்ட் செய்து அதில் லொக்கேஷன் அனுப்பலாம்.
மெட்டா இந்த வசதியை அறிமுகம் செய்தால் ஸ்னாப்ஷேட்-ல் உள்ள ஸ்னாப் மேப் வசதியை போன்ற இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.