தூத்துக்குடியில் ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்கள் – நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி!
Mar 15, 2026, 02:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தூத்துக்குடியில் ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்கள் – நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி!

Murugesan M by Murugesan M
Feb 28, 2024, 10:44 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ரூ.17 ஆயிரத்து 300 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

பாரத பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக நேற்று தமிழகம் வந்தார். அவர் பல்லடம், மதுரை ஆகிய இடங்களில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இரவில் அவர் மதுரையில் தங்கினார்.

இந்நிலையில், இன்று தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ரூ.17 ஆயிரத்து 300 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பாரத பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

இவ்விழாவில் இராமேஸ்வரம் பாம்பன் கடலில் அமைக்கப்பட்ட தூக்கு பாலத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். பின்னர், குலசேகரப்பட்டினம் இஸ்ரோ விண்வெளி ஏவு தளத்தின் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

பிரதமர் மோடி குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளத்தை தொடங்கி வைக்கும் நேரத்தில், ரோகிணி ஒலியெப்பும் ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது. 200 கிலோமீட்டர் விண்ணில் செல்லும் திறன் கொண்ட ஆர்.ஹெச்.200 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.

வ.உ.சி துறைமுகத்தில் ரூ.7055.95 கோடி மதிப்பில் தூத்துக்குடி வெளித் துறைமுக கட்டுமான பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இங்கு குறிப்பாக கப்பல்களில் உள்நாட்டு கப்பல்களில் எரிபொருளாக பசுமை ஹைட்ரஜன் பயன்படுத்தப்பட உள்ளது. அதற்கான எரிபொருள் மையம் ரூ.1950 கோடி மதிப்பில் முதன்முதலில் தூத்துக்குடி துறைமுக வளாகத்தில் உருவாகிறது. தூத்துக்குடி மூன்றாவது வடக்கு நிலக்கரி தளத்தை இயந்திர மயமாக்கும் பணியை ரூ.265.15 கோடி மதிப்பில் தொடக்கி வைக்கிறார்.

தூத்துக்குடி துறைமுகத்தில் 124.32 கோடி ரூபாய் மதிப்பில் தினமும் 5 மில்லியன் லிட்டர் அளவுக்கு கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் அமைகிறது. தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலைகள் பணிகள் ரூ.4,586 கோடியில் மேற்கொள்ளப்படுகிறது.

இரயில்வே திட்டப் பணிகள் ரூ.1477 கோடி மதிப்பில் நடக்க உள்ளது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 75 கலங்கரை விளக்கங்களை சுற்றுலாத்தலமாக்கும் பணிகளையும் மோடி தொடங்கி வைக்கிறார்.

இந்த நிகழ்வை துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில்வே அமைச்சகங்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. இத்திட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துதல், போக்குவரத்து உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் கடல்சார் திறன்களை வலுப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டுள்ளன.

தூத்துக்குடியில் அரசு விழாவை முடித்துக் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டரில் திருநெல்வேலி புறப்படுகிறார். அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

என் அன்பு சகோதர சகோதரிகளுக்கு, என் நெஞ்சார்ந்த நன்றிகள்! – அண்ணாமலை

Next Post

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி! – சென்னை உயர் நீதிமன்றம்

Related News

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

Load More

அண்மைச் செய்திகள்

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies