இன்று அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்கள், திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், வெறும் கோரிக்கைகளாகவே பல ஆண்டுகளாக இருந்தன எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
இன்றைய தினம், சுமார் 7,055.95 கோடி ரூபாய் மதிப்பில், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் வெளித் துறைமுகக் கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்ததோடு, குலசேகரப்பட்டினம் இஸ்ரோ விண்வெளி ஏவுதளத்தின் கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ள நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக மக்கள் சார்பிலும், தமிழக பாஜக சார்பிலும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் பசுமை ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்டு இயங்கும், உள்நாட்டுக் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டு, அதற்கான எரிபொருள் மையம், தூத்துக்குடி துறைமுக வளாகத்தில் அமையவிருக்கிறது.
விரைவில், தூத்துக்குடியில் தயாரிக்கப்படும் ஹைட்ரஜன் எரிபொருள் பயன்படுத்தப்படும் உள்நாட்டுக் கப்பல்கள், காசியில் கங்கை நதியில் விரைவில் ஓடும் என்று நமது பிரதமர் பெருமிதம் தெரிவித்தார். மேலும், தூத்துக்குடி 3 ஆவது வடக்கு நிலக்கரித் தளம் ரூ.265.15 கோடி மதிப்பில் இயந்திரமயமாக்கப்படுகிறது.
இதனுடன், தூத்துக்குடி துறைமுக வளாகத்தில், தினமும் 5 மில்லியன் லிட்டர் கடல் நீரைக் குடிநீராக்கும் ரூ. 124.32 கோடி மதிப்பிலான திட்டமும், நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே திட்டப் பணிகளும், நமது பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களால் இன்று தொடங்கி வைக்கப்படுகின்றன.
இன்று அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்கள், திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், வெறும் கோரிக்கைகளாகவே பல ஆண்டுகளாக இருந்தன. இவற்றை நிறைவேற்ற இத்தனை ஆண்டுகளாக திமுக காங்கிரஸ் கூட்டணி முன்வரவில்லை.
இன்றைய தினம், சுமார் 7,055.95 கோடி ரூபாய் மதிப்பில், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் வெளித் துறைமுகக் கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்ததோடு, குலசேகரப்பட்டினம் இஸ்ரோ விண்வெளி ஏவுதளத்தின் கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ள நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு… pic.twitter.com/GXKrM2JiNo
— K.Annamalai (@annamalai_k) February 28, 2024
இன்று அறிவித்துள்ள திட்டங்கள் மூலம், தமிழக மக்களுக்கும், இளைஞர்களுக்கும், பல ஆயிரம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகியிருக்கின்றன என்றும் நமது பாரதப் பிரதமர் குறிப்பிட்டார்.
நீர்வழி, நெடுஞ்சாலைகள், வந்தே பாரத் உள்ளிட்ட ரெயில்வே பணிகள் என அனைத்திலும், தமிழகத்தின் போக்குவரத்துத் துறையை மேம்படுத்திக் கொண்டிருக்கிறது மத்திய அரசு என்றும், தமிழகம் கடந்த பத்து ஆண்டுகளில், அனைத்துப் போக்குவரத்துத் துறையில் பல மடங்கு முன்னேறியிருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
மத்திய அரசின் நலத்திட்டங்களையும், வளர்ச்சிப் பணிகளையும், தமிழக ஊடகங்கள் வெளியிடாது. இங்குள்ள திமுக அரசு, அவற்றை வெளியிட அனுமதிக்காது. ஆனாலும், தமிழக நலனுக்காக, மத்திய அரசு தொடர்ந்து நலத்திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டுதான் இருக்கும் என்றும் நமது பிரதமர் அவர்கள் உறுதி அளித்தார்.