அறிவியல் உணர்வு, கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பம் குறித்த தமது எண்ணங்களின் காணொலியையும் மோடி பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்தியாவில் ஆண்டு தோறும் பிப்ரவரி 28 ஆம் தேதி தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. “ராமன் விளைவு” கண்டுபிடிக்கப்பட்டதை கௌரவிக்கும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் தேசிய அறிவியல் தினம் கருப்பொருள் அடிப்படையிலான அறிவியல் தொடர்பு நிகழ்வுகளுடன் நாடு முழுவதும் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுவது வழக்கம்.
Greetings on National Science Day. Our Government is continuously working to encourage research and innovation among the youth. This is important to realise our dream of a Viksit Bharat. pic.twitter.com/48jmnnDc4j
— Narendra Modi (@narendramodi) February 28, 2024
அந்தவகையில் இந்த ஆண்டு “விக்சித் பாரதத்திற்கான உள்நாட்டு தொழில்நுட்பங்கள்” (Indigenous Technologies For Viksit Bharat). அதாவது, ‘உள்நாட்டுத் தொழில்நுட்பங்களில் வளர்ச்சியடைந்த பாரதமாக’ இந்த கருப்பொருள் உள்ளது.
இந்நிலையில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டுப் பாரத பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அறிவியல் உணர்வு, கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பம் குறித்த தமது எண்ணங்களின் காணொலியையும் மோடி பகிர்ந்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில், “”தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு எனது நல்வாழ்த்துகள். இளைஞர்களிடையே ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க எங்கள் அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது. வளர்ச்சியடைந்த பாரதம் என்ற நமது கனவை நனவாக்க இது முக்கியமாகும்.” என்று பதிவிட்டுள்ளார்.