இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சுகு ராஜினாமா! - ஆட்சி கவிழும் சூழல்!
Sep 10, 2025, 04:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சுகு ராஜினாமா! – ஆட்சி கவிழும் சூழல்!

Web Desk by Web Desk
Feb 28, 2024, 07:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இமாச்சலப்பிரதேச முதல்வர் சுக்விந்தர் சுகு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

காங்கிரஸ் ஆளும் இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு நடந்த தேர்தலின்போது, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் பாஜகவுக்கு வாக்களித்ததாக கூறப்படுகிறது. இதனால், பாஜக வேட்பாளர் வெற்றியடைந்தார். காங்கிரஸ் வேட்பாளர் தோல்வியடைந்தார்.

இமாச்சலப்பிரதேச சட்டப்பேரவையில் மொத்தம் 68 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் காங்கிரஸ் கட்சிக்கு 40 உறுப்பினர்களும், பாஜகவிடம் 25 உறுப்பினர்களும் உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் 6 உறுப்பினர்கள் கட்சி மாறி பாஜகவுக்கு வாக்களித்தது மாநிலத்தில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு வழிவகுத்துள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு டிசம்பரில் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. இந்தநிலையில், மாநிலத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க காங்கிரஸ் மேலிடம் முயற்சித்து வருகிறது.

இதனிடையே இமாச்சலப்பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு மீதான அதிருப்தி காரணமாக அம்மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் விக்ரமாதித்ய சிங் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் முன்னாள் முதல்வர் விர்பத்ர சிங்கின் மகனாவார்.

இமாச்சலப் பிரதேசத்தில் ஆறு முறை முதல்வராக இருந்தவரும், காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதற்கு காரணமாக இருந்தவருமான தனது தந்தை வீர்பத்ர சிங்கிற்கு சிலை வைக்க மால் சாலையில் ஒரு சிறிய இடத்தைக் கண்டடைய இமாச்சல் அரசு தவறி விட்டதாக விக்ரமாதித்ய சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

அவருக்கு சில எம்.எல்.ஏ.க்களின் ஆதரவும் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்த சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 3 பேரின் ஆதரவு பாஜகவுக்கு இருப்பதாக கூறப்படுகிறது. இதுபோன்ற காரணங்களினால் அம்மாநிலத்தில் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், இமாச்சலப்பிரதேச முதல்வர் சுக்விந்தர் சுகு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை எதிர்க்கட்சித் தலைவர் ஜெய்ராம் தாக்கூர் தெரிவித்துள்ளார். ஆனால், சுக்விந்தர் சுகு தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. அதேசமயம், எந்த நேரமும் ராஜினாமா செய்ய தயாராக இருக்குமாறும், காங்கிரஸ் கட்சித் தலைமையின் உத்தரவை ஏற்று சுக்விந்தர் சிங் சுகு பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tags: Himachal Pradesh Chief Minister Sukhwinder Suku resigns!
ShareTweetSendShare
Previous Post

8 மாநிலங்களுக்கு ஸ்கெட்ச் போட்ட பா.ஜ.க – டெல்லியில் பரபரப்பு

Next Post

பிக் பாஸ் பிரபலம் வீட்டில் அமலாக்கத் துறையினர் விசாரணை!

Related News

புதுக்கோட்டை : அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த இறால் பண்ணை உரிமையாளர்!

கொடைக்கானலில் உணவகம் மீது சரிந்து விழுந்த சுவர்!

புதிய ரூட்டில் தவெக தலைவர் விஜய் பிரச்சார பயணம்!

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

சேலம் : லகு உத்யோக் பாரதி அமைப்பின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா!

பரமக்குடி : இமானுவேல் சேகரன் நினைவு தினம் – 7000 போலீசார் குவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மிடில் கிளாஸ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

வரும் 14ம் தேதி இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா!

லிட்டில் ஹார்ட்ஸ் படக்குழுவை பாராட்டிய நானி!

கல்லூரி மாணவரை கார் ஏற்றிக் கொலை செய்த வழக்கு – தி.மு.க. பிரமுகரின் பேரனுக்கு நிபந்தனை ஜாமீன்!

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

சேலம் – விஷ்ணு சகஸ்ர நாம பாராயண நிகழ்வு – திரளான பெண்கள் பங்கேற்பு!

சென்னை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறன் மாணவர்களுக்கான ஆசிரியர்கள் போராட்டம்!

திண்டுக்கல் : திமுக கவுன்சிலர் மீது நிலம் அபகரிப்பு புகார்!

காத்மாண்டுவில் முன்னாள் பிரதமர் ஜலநாத் கானலின் வீடுக்கு தீவைத்த போராட்டக்காரர்கள்!

படப்பிடிப்பு தளத்தில் பிறந்தநாளை கொண்டாடிய அணஸ்வரா ராஜன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies