ரூ.1393.69 கோடி மதிப்பிலான என்சிஎல் நிறுவனத்தின் இணைப்புத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் நிலக்கரி விநியோகம் மற்றும் நிலக்கரியின் தரத்தை மேம்படுத்துவதில் உறுதியான அர்ப்பணிப்புடன் செயல்படும் நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கோல் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனமான நார்தர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (என்சிஎல்) நிறுவனம் இரண்டு குறிப்பிடத்தக்க இணைப்புத் திட்டங்களை நாளை தொடங்குகிறது. இதனை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார்.
நார்தர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் செயல்படுத்தும் ரூ.1393.69 கோடி மதிப்புள்ள இந்தத் திட்டங்கள், கார்பன் உமிழ்வைக் குறைப்பதில் முக்கியப் பங்களிக்கும்.
இந்தத் திட்டங்களின் தொடக்கத்திற்குப் பிறகு, நிலக்கரியை வெளியேற்றும் செயல்முறைகளில் செயல்திறன் மற்றும் நிலைத்தன்மை அதிகரிக்கும். அதே நேரத்தில் போக்குவரத்து நேரம் மற்றும் செலவுகள் குறையும். இதன் மூலம் ஒட்டுமொத்த உற்பத்தித்திறன் மற்றும் லாபம் அதிகரிக்கும்.
பசுமையான எதிர்காலத்தை ஊக்குவித்து, இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்புக்கு பங்களிப்பதை நோக்கமாகக் கொண்ட உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் நீடித்த முன்முயற்சிகளுக்கான நிலக்கரி அமைச்சகத்தின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை இந்தத் திட்டங்கள் குறிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.