தமிழகத்திற்கு சேவை செய்வதை நிறுத்தமாட்டோம் எனத் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி நேற்று திருப்பூரில் நடைபெற்ற என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்றார்.
தொடர்ந்து மதுரை சென்ற அவர் மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இன்று காலை தூத்துக்குடி சென்ற அவர் அங்கு ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்.
இதை தொடர்ந்து நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார்.
கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி,
நான் கூறுவதெல்லாம் அரசியல் கொள்கைகள் அல்ல. எனது கொள்கையை கூறவில்லை. நான் வளர்ச்சியை பற்றி பேசுகிறேன். ஆனால், எனக்கு தெரியும் தமிழகத்தில் உள்ள பல செய்தித்தாள்கள், செய்தி தொலைக்காட்சிகள் இதையெல்லாம் எழுத நினைப்பார்கள், மக்களுக்கு தெரிவிக்க நினைப்பார்கள். ஆனால், இங்கு நடைபெறும் ஆட்சி அவர்களை செய்யவிடாது.
இருந்தாலும் நாம் தமிழகத்திற்காக சேவை செய்வதை நிறுத்தமாட்டோம். வளர்ச்சியில் இருந்து தமிழகத்தை விலகி செல்ல விடமாட்டோம் எனத் தெரிவித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மேற்கொண்டு வரும் வளர்ச்சிப் பணிகளை தமிழக மக்கள் பாராட்டினாலும், அதை ஊடகங்கள் அவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்க திமுக அரசு அனுமதிப்பதில்லை எனத் தெரிவித்தார்.
திமுகவுக்கு பாரதம் விண்வெளியில் வளர்ச்சி பெறுவதை காண விருப்பம் இல்லை. அவர்கள் வெளியிட்ட விளம்பத்தில், பாரத விண்வெளித்துறையின் படத்தை வைக்கவில்லை. விண்வெளியில் பாரதம் சாதித்ததை அவர்கள் உலகத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் காட்ட விரும்பவில்லை. அவர்கள் இந்திய விஞ்ஞானிகளையும், விண்வெளித்துறையையும் அவமதித்துவிட்டார்கள் எனக் குற்றம் சாட்டினார்.