சச்சின் டெண்டுல்கர் காஷ்மீர் பயணம் : பிரதமர் மோடி பாராட்டு!
Jan 14, 2026, 06:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சச்சின் டெண்டுல்கர் காஷ்மீர் பயணம் : பிரதமர் மோடி பாராட்டு!

Murugesan M by Murugesan M
Feb 28, 2024, 05:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது காஷ்மீர் பயணம் குறித்து பதிவு ஒன்றை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றுள்ளார். சச்சின் டெண்டுல்கருடன் அவரின் மனைவி அஞ்சலி மற்றும் மகள் சாரா ஆகியோர் உடன் சென்றுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் தனது ரசிகளர்களுடன் ரோட்டில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த வீடியோவை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

பின்னர் தனது இரண்டு கைகளையும் இழந்த ஜம்மு காஷ்மீர் பாரா கிரிக்கெட் அணியின் கேப்டன் அமீர் ஹூசைனை சச்சின் டெண்டுல்கர் நேரில் சந்தித்து அவருக்கு ஒரு கிரிக்கெட் பேட்டை பரிசாக வழங்கிய விடியோவை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

மேலும் அவர் காஷ்மீரில் தனது குடும்பத்தாருடன் எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் சச்சின் தனது காஷ்மீர் பயணத்தை முடித்துவிட்டு தனது எக்ஸ் தளபக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ” ஜம்மு காஷ்மீர் எனது நினைவில் ஒரு சுகானுபவமாக கலந்திருக்கும். அங்கு எங்கெங்கு காணினும் பனி படர்ந்திருந்தது. இருப்பினும் காஷ்மீர் மக்களின் தன்னிகரற்ற விருந்தோம்பல் எங்களுக்கு இதமான அனுபவத்தைத் தந்தது.

பிரதமர் நரேந்திர மோடி நம் தேசத்தில் காண வேண்டியவை நிறைய இருக்கின்றன எனச் சொல்லியிருந்தார். அது உண்மைதான். இந்த காஷ்மீர் பயணத்தில் அதை உணர்ந்தேன்.

காஷ்மீர் வில்லோ மர கிரிக்கெட் பேட்கள் ‘மேக் இன் இந்தியா’வுக்கு சிறந்த உதாரணம். மேக் ஃபார் வேர்ல்டுக்கும் சாட்சி. காஷ்மீர் வில்லோ மர பேட்கள் உலகம் முழுவதும் பயணிக்கின்றன.

This is wonderful to see! @sachin_rt’s lovely Jammu and Kashmir visit has two important takeaways for our youth:

One – to discover different parts of #IncredibleIndia.

Two- the importance of ‘Make in India.’

Together, let’s build a Viksit and Aatmanirbhar Bharat! https://t.co/YVUlRbb4av

— Narendra Modi (@narendramodi) February 28, 2024

இப்போது உலக மக்கள் அனைவரும் இந்தியாவுக்கு வர வேண்டும், காஷ்மீரைக் காண வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன். வியத்தகு இந்தியாவின் பல்வேறு விலைமதிப்பற்ற ஆபரணங்களில் காஷ்மீரும் ஒன்று” எனப் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் சச்சின் டெண்டுல்கரின் பதிவை கண்டா பாரத பிரதமர் மோடி அவரை பாராட்டி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “இதைப் பார்ப்பதற்கே அற்புதமாக இருக்கின்றது. சச்சினின் ஜம்மு காஷ்மீர் பயணத்திலிருந்து இளைஞர்கள் கற்றுக் கொள்ள இரு விஷயங்கள் உள்ளன.

ஒன்று வியத்தகு இந்தியாவின் பல பகுதிகளைக் கண்டு ரசிக்க வேண்டும். இன்னொன்று மேக் இன் இந்தியாவின் முக்கியத்துவம். நாம் ஒன்றிணைந்து வளர்ந்த பாரதம், தன்னம்பிக்கை நிறைந்த பாரதத்தை உருவாக்குவோம்” எனப் பதிவிட்டுள்ளார்.

Tags: PM Modisachin tendulkar
ShareTweetSendShare
Previous Post

மகாராஷ்டிரா, டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா!

Next Post

குலசேகரப்பட்டினத்தில் இருந்து ஏவப்பட்ட ரோகிணி சவுண்டிங் ராக்கெட்!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies