பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில், காலிஸ்தான் தொடர்புடைய 16 இடங்களில், தேசிய புலனாய்வு அமைப்பினர் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர். இதில், காலிஸ்தான் தீவிரவாதிகள் ஆறு பேர் சிக்கினர்.
பாரத பிரதமர் நரேந்திர தலைமையிலான மத்திய அரசு, தீவிரவாதத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது. தீவிரவாதத்தை முழுமையாக அழிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை, 16 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், பஞ்சாபில் 14 இடங்களில் சோதனை நடந்தது. மேலும், ராஜஸ்தானில் இரண்டு இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தியது.
காலிஸ்தான் ஆதரவாளர்கள் மற்றும் கிரிமினல் குற்றவாளிகளுடன் தொடர்புடையவர்களின் வீடுகள் மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை செய்தனர்.
சோதனையின் போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதன் போது ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் காலிஸ்தான் அமைப்புடன் தொடர்புடையதவர்கள் என்று கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட 6 பேரிடமும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.