நேர்மை மற்றும் எளிமையின் கலங்கரை விளக்கமாக விளங்கியவர் மொராஜி தேசாய் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சுதந்திர போராட்ட வீரரும், முன்னாள் பிரதமருமான மொரார்ஜி தேசாய் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ஸ்ரீ மொரார்ஜிபாய் தேசாய் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி. அவர் இந்திய அரசியலில் ஓர் தலைசிறந்த தலைவர். நேர்மை மற்றும் எளிமையின் கலங்கரை விளக்கமாக விளங்கிய அவர், மகத்தான அர்ப்பணிப்புடன் நமது தேசத்திற்கு சேவை செய்துள்ளார் என மோடி தெரிவித்துள்ளார்.
மேலும் மொராஜி தேசாய் குறித்து முந்தைய #MannKiBaat நிகழ்வில் அவரை பற்றி பேசிய வீடியோவையும் அவர் பதிவு செய்துள்ளார்.