மத்திய பிரதேசத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசம் திந்தூரி மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 21 பேர் காயம் அடைந்தனர். விபத்தில் உயிரிழந்தோரின் குடுமபத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், மத்தியப் பிரதேசத்தின் திண்டோரியில் நடந்த சாலை விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபம்.
இந்த துயரமான நேரத்தில் குடும்பத்திற்கு கடவுள் வலிமை அளிக்கட்டும். காயமடைந்தவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். மாநில அரசு மற்றும் உள்ளூர் நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளிலும் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.