ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு செல்லும் விண்வெளி வீரரை தனது 43வது வயதில் திருமணம் செய்துகொண்டார் மலையாள நடிகை லீலா.
கேரள மாநிலம் திரிசூரை சேர்ந்தவர் மலையாள நடிகையான லீனா மோகன் குமார். இவர் 1998-ஆம் ஆண்டு ‘சிநேகம்’ என்ற மலையாள படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். இதுவரை 70-க்கும் மேற்பட்ட மலையாள படங்களில், பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
லீனா தமிழில், நடிகர் தனுஷ் நடித்த ‘அனேகன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் விக்ரமின் ‘கடாரம் கொண்டான்’, நயன்தாரா நடித்த ‘ஓ2’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் 2004-ஆம் ஆண்டு அபிலாஷ் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் 2013-ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார்.
பின்னர் தன்னுடைய பெற்றோருடன் தனியாக வசித்து வான்தார். இந்நிலையில் தற்போது தனது 43 வயதில் பாலக்காட்டைச் சேர்ந்த பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட தகவலை தன்னுடைய சமூக வலைத்தளம் மூலம் அறிவித்துள்ளார்.
நடிகை லீனா திருமணம் செய்து கொண்டுள்ள பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் விண்வெளி ஆராய்ச்சி வீரராவார். பிரதமர் மோடி பிப்ரவரி 27ஆம் தேதி கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விண்வெளியில் ஆராய்ச்சி மேற்கொள்ள செல்லவுள்ள நான்கு வீரர்களை அறிமுகம் செய்து வைத்தார். அந்த நான்கு வீரர்களில் பாலகிருஷ்ணன் நாயரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.