வரும் 2024 – 2025 -ம் கல்வி ஆண்டில், அரசு தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் மார்ச் 1-ம் தேதி முதல் மாணவர்கள் சேர்க்கை துவங்க உள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும், அரசு தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் 5 வயது பூர்த்தியடைந்த குழந்தைகள் அனைவரையும் மார்ச் 1 -ம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் சேர்க்கலாம்.
இது தொடர்பாக பள்ளி கல்விதுறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பில், பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும். அதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற வேண்டும். பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை கோடை விடுமுறைக்கு முன்னரே மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.