மாநிலங்களவை தேர்தலில் தோல்வி அடைந்த காங்கிரஸ் தார்மீக ரீதியாக பதவியில் நீடிக்க தகுதியில்லை என இமாச்சல பிரதேச பாஜக மாநில தலைவர் ராஜீவ் பிண்டல் தெரிவத்துளளார்.
இமாசல பிரதேச சட்டமன்றத்தில் மாநிலங்களவை தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேர் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். மேலும் பட்ஜெட் மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் தரப்பில் சபாநாயகரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக விளக்கம் கேட்டு எம்எல்ஏக்கள் 6 பேரிடமும் சாபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். விளக்கம் அளிக்க ஒரு வாரம் கால அவகாசம் வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டனர்.இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் நடவடிக்கை மேற்கோண்டுள்ளார்.
இதுதொடர்பாக இமாச்சல பிரதேச பாஜக மாநில தலைவர் ராஜீவ் பிண்டல் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மாநிலங்களவை தேர்தலில் தோல்வி அடைந்த காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளது. எனவே தார்மீக ரீதியாக அவர்கள் பதவியில் நீடிக்க தகுதியில்லை என தெரிவித்தார்.
















