ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் இருவருக்கும் ஆதரவு தெரிவித்த ரவி சாஸ்திரி !
Mar 15, 2026, 06:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் இருவருக்கும் ஆதரவு தெரிவித்த ரவி சாஸ்திரி !

Murugesan M by Murugesan M
Feb 29, 2024, 03:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய அணியின் இளம் வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் இருவரும் பொய் கூறியதால் பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து ரவி சாஸ்திரி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் பணிச்சுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதற்கு தமக்கு அனுமதி கொடுக்குமாறு இஷான் கிஷன் பி.சி.சி.ஐ-யிடம் அனுமதி கேட்டார்.

அதற்கு பிசிசிஐ அனுமதி கொடுத்த நிலையில் குடும்பத்துடன் நேரத்தை செலவிடாத அவர் துபாய்க்கு சென்று 2024 புத்தாண்டு பார்ட்டியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

அதன் பிறகு சில தொடர்களில் இஷான் கிஷன் ஓரங்கட்டப்பட்டார். மேலும் இஷான் கிஷனை ரஞ்சி கோப்பை போட்டிகளில் விளையாட சொல்லி பி.சி.சி.ஐ வலியுறுத்தியுறுத்தியது.

ஆனால் அவர் ரஞ்சி தொடரில் விளையாடாமல் ஹர்திக் பாண்டியவுடன் சேர்ந்து ஐபிஎல் தொடருக்கு தயாராகி வந்தார். இவரை போல ஸ்ரேயாஸ் ஐயரையும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ஆனால் அவர் முதுகுபிடிப்பு காரணமாக நடப்பு ரஞ்சி கோப்பை தொடரிலிருந்து விலகுவதாக கூறினார். இதனால் அதிருப்தி அடைந்த பி.சி.சி.ஐ அவரை பரிசோதித்து அறிக்கை சமர்பிக்கும்படி என்.சி.ஏ-விற்கு உத்திரவிட்டிருந்தது.

அதன்படி என்.சி.ஏ மருத்துவர் பி.சி.சி.ஐ-க்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில், ஸ்ரேயாஸ் ஐயருக்கு எந்தவிதமான புதிய காயங்களும் ஏற்படவில்லை. மேலும் அவர் முழு உடற்தகுதியுடன் உள்ளார் என்று தெரிவித்துள்ளது.

இப்படி பொய் கூறியதற்காக இவர்கள் இருவரையும் பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து நீக்கியது. இந்த நிலையில் ஒட்டுமொத்த ரசிகர்களும் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இசான் கிஷன் கிண்டல் செய்து வருகிறார்கள். இவ்விரு வீரர்களையும் இனி இந்திய அணியில் சேர்க்கக்கூடாது என்றெல்லாம் பேசி வருகிறார்கள்.

ஆனால் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வீரர்களுக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ” கிரிக்கெட் போன்ற விளையாட்டில் நாம் எவ்வாறு திரும்பி கம் பேக் கொடுக்கிறோம் என்பதில் தான் வெற்றியே இருக்கிறது. ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் இருவரும் கவலைப்படக்கூடாது. கடுமையாக இனி உழையுங்கள். சவால்களை எதிர்கொள்ளுங்கள்.

மீண்டும் பலமான வீரராக கம்பேக் கொடுங்கள். நீங்கள் இருவரும் எவ்வளவு திறமைசாலிகள், என்ன சாதனைகளை படைத்திருக்கிறீர்கள் என்பது அனைவருக்குமே தெரியும். எனவே எனக்கு கொஞ்சம் கூட உங்கள் மீது சந்தேகமில்லை. நீங்கள் மீண்டும் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்துவீர்கள்” என்று ரவி சாஸ்திரி அறிவுரை வழங்கி பதிவிட்டுள்ளார்.

Tags: BCCIIshan KishanShreyas IyerRavi Shastri
ShareTweetSendShare
Previous Post

ஈரோட்டில் சதமடித்த வெயில்: வானிலை மையம் தகவல்!

Next Post

IPL : லக்னோ அணி கேப்டன் அறிவிப்பு !

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies