லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, தனது கேப்டன் மற்றும் துணை கேப்டன் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 17வது சீசன் வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில் மொத்தமாக 10 அணிகள் பங்குபெறுகின்றன.
அதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பங்குபெறுகின்றன.
இதன் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. மேலும் இதற்கான மினி ஏலம் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்கினர்.
இந்நிலையில் தற்போது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, தனது கேப்டன் மற்றும் துணை கேப்டன் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 2024 ஐ.பி.எல். தொடரில் லக்னோ அணியின் கேப்டனாக கே.எல்.ராகுலும், துணை கேப்டனாக நிக்கோலஸ் பூரனும் செயல்படுவார்கள் என அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதில் கே.எல்.ராகுல் லக்னோ அணி ஆரம்பிக்கப்பட்ட சீசனிலிருந்தே அதன் கேப்டனாக செயல்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
KL Rahul (C)
Nicholas Pooran (VC)This season feels special already 💙 pic.twitter.com/367JTTeSHL
— Lucknow Super Giants (@LucknowIPL) February 29, 2024