மக்களவைத் தேர்தலையொட்டி, துணை ராணுவப்படை நாளை தமிழகம் வருகிறது.
வரும் மக்களவைத் தேர்தல் மார்ச் கடைசி அல்லது ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் மக்களவை தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.
மக்களவை தேர்தலை ஒட்டி துணை ராணுவப்படையினர் 2 கட்டங்களாக தமிழகம் வருகை தர உள்ளனர். முதற்கட்டமாக 15 கம்பெனி துணை ராணுவப் படையினர் நாளை தமிழ்நாடு வர உள்ளதாகவும், மேலும், 10 கம்பெனி துணை ராணுவப் படையினர் மார்ச் 7 -ம் தேதி வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு கம்பெனியில் 50 வீரர்கள் வீதம் மொத்தம் 200 கம்பெனி துணை ராணுவப் படையினர் தமிழகம் வருவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த தேர்தலில் 160 கம்பெனி துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடனர் என்பது குறிப்பிடத்தக்கது.