விவசாயத்திற்கான உரங்களுக்கு ரூ.24,420 கோடி மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் சில முக்கிய திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியானது.
அதில் விவசாயத்திற்கான உரங்களுக்கு ரூ.24,420 கோடி மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ” விவசாயத்திற்கான உரங்களுக்கு ரூ.24,420 கோடி மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு விலையிலேயே விவசாயிகளுக்கு உரங்களை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதேபோல், ரூ.75,021 கோடி செலவில் ஒரு கோடி வீடுகளில் சூரிய மின் தகடுகள் அமைக்கும் திட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் ஒரு கோடி குடும்பங்கள் தலா 300 யூனிட் மின்சாரம் இலவசமாக பெறுவார்கள்” என்று கூறினார்.