சமயபுரம் கோவில் யானை வழக்கு : உயர் நீதிமன்றம் தீர்ப்பு !
Mar 15, 2026, 03:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சமயபுரம் கோவில் யானை வழக்கு : உயர் நீதிமன்றம் தீர்ப்பு !

Murugesan M by Murugesan M
Feb 29, 2024, 06:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதுமலை யானைகள் முகாமில் சமயபுரம் கோவில் யானையை பராமரிக்க வேண்டும் என  உயர் நீதிமன்றம்  உத்தரவு அளித்துள்ளது.

திருச்சி அருகே  சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு  முதுமலை தெப்பக்காட்டில் வளர்ந்த யானை மசினியை  மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்  ஜெயலலிதா பிறந்தநாள் பரிசாக வழங்கினார்.

யானைப் பாகன் கஜேந்திரன் கண்காணிப்பில் யானை மசினி வளர்ந்தது. வனப்பகுதியில் இருந்தபோது சுறுசுறுப்பாக இருந்த யானை, மற்ற யானைகளிடமிருந்து பிரிந்து கோவிலுக்கு வந்தபின் அதன் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு மே 25-ந்தேதி மசினி யானைக்கு மதம் பிடித்த நிலையில், பாகன் கஜேந்திரனை மிதித்து கொன்றது. இந்த சம்பவத்தையடுத்து மசினி யானை தஞ்சாவூர் ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை ஆராய்ச்சி கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டது.

இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த ஆண்டனி கிளமெண்ட் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தஞ்சாவூர் ஒரத்தநாடு கால்நடை ஆராய்ச்சி கல்லூரியில் உள்ள சமயபுரம் கோவில் யானையை, முதுமலை தெப்பக்காட்டு யானைகள் முகாமில் சேர்க்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, மசினி யானையை முதுமலை தெப்பக்காடு முகாமில் சேர்த்து போதிய மருத்துவ சிகிச்சை வழங்க உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது கோவில் தரப்பில் ஆஜரான வக்கீல், யானை தற்போது நல்ல உடல் நலத்தோடு ஆரோக்கியமாக உள்ளது. யானை பராமரிப்புக்காக கோவில் நிர்வாகம் சார்பில் 10 லட்சம் ரூபாய் வனத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், முதுமலை யானைகள் முகாமில் வனத்துறை அதிகாரிகள் சமயபுரம் கோவில் யானையை தொடர்ந்து பராமரிக்கவும் கண்காணிக்கவும் வேண்டும் என்றும் வாரம் ஒருமுறை கால்நடைத்துறை மருத்துவர்கள் யானையை பரிசோதிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Tags: Maduraielephantsamayapuram templemudumalai elephant campmadurai high court orders
ShareTweetSendShare
Previous Post

WPL : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதல்!

Next Post

உ.பி, பஞ்சாப், அரியானாவின் எல்லைகளை மாற்றக் கோரிய மனு தள்ளுபடி!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies