மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்றையப் போட்டியில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடவுள்ளன.
இந்தியாவில் பெண்களுக்கான மகளிர் பிரீமியர் லீக் ( WPL ) நடைபெற்றுவருகிறது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன.
இந்த தொடரில் ஏழாவது போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடவுள்ளன.
இந்த போட்டி இரவு 7:30 மணிக்கு தொடங்கவுள்ளது. இதில் ஸ்ம்ரிதி மந்தனா தலைமையிலான பெங்களூர் அணி தான் விளையாடிய 2 போட்டிகளில் 2 போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
அதேபோல் டெல்லி கேப்பிடல்ஸ் அணி தாங்கள் விளையாடிய 2 போட்டிகளில் ஒரு போட்டியிலும் வெற்றி பெற்று ஒரு போட்டியில் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.