சென்னையில் திமுக நிர்வாகி ஆராவமுதன் மீது மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், வெடிகுண்டு கலாச்சாரம் அதிகரித்து வருவதாக பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில், சென்னை அடுத்துள்ள வண்டலூர் அருகே திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் ஆராவமுதன் சென்ற போது, அவர் மீது மர்மநபர்கள் நாட்டு வெடிகுண்டை வீசி திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், அவரது ஒரு கையை துண்டாக வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், உயிருக்கு போராடி வந்த ஆராவமுதனை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், வெடிகுண்டு வீசிய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அரசியல் விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது.
ஆளுங்கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர், சென்னையில் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.