முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, மத்திய இணை அணைச்சர் எல்.முருகன் தனது எக்ஸ் தளத்தில்,
தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர் அண்ணன் திரு. பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். தமிழக பா.ஜ., மாநில தலைவராகவும், மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு மத்திய இணை அமைச்சராகவும் பணியாற்றிய சிறப்புமிக்கவர்.
தனது வாழ்நாளை சமூகப் பணிகளுக்காக அர்ப்பணித்து வாழ்ந்து வரும், அண்ணன் திரு.பொன்.இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு, கடவுள் நல்ல ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும் தந்திட வேண்டிக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.