தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதியான இன்று தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 1-ம் தேதி நடைபெறும் எனப் பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. அதன் பேரில், பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதியான இன்று தொடங்கியது. இந்த தேர்வு மார்ச் 22 -ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 7,72,200 மாணவர்கள் தேர்வு எழுகி வருகிறார்கள். ஒவ்வொரு தேர்வுக்கும் 3 முதல் 4 நாள்கள் இடைவெளிவிட்டுத் தேர்வு நடைபெற்றும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு முடிவடைகிறது. தேர்வில் மாணவர்கள் அரசு அறிவித்த கட்டுப்பாடுகள், விதிமுறைகள் ஆகியவற்றைக் கடைபிடிக்க வேண்டும் என்றும், முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், காலையில் குறிப்பிட்ட நேரத்திற்கு தேர்வு அறைக்கு வருகை தந்த மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பொதுத்தேர்வை எழுதி வருகின்றனர்.