தருமபுரி மாவட்டத்தில், இந்தத் திருக்கோவில் அரூர் – திருவண்ணாமலை சாலையில் 17-வது கிமீ தொலைவில் தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில் அமைந்துள்ளது.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார் . இத்தல விநாயகர் சித்தி விநாயகர் ஆவார். மலைக்கு மேற்கே ராமன் தீர்த்தம், வாயு தீர்த்தம், வருண தீர்த்தமும், கிழக்கே இந்திர தீர்த்தமும்,
வடக்கே அனுமந்த தீர்த்தமும், தெற்கே எம தீர்த்தமும் உள்ளது. இப்படி தீர்த்தங்களால் சூழப்பெற்ற அற்புத மலை தீர்த்தமலை. இந்தியாவிலேயே 1000 வருடம் பழமை வாய்ந்த திருத்தலங்களில் இந்த கோவிலும் ஒன்று.
இந்த நிலையில், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோயில் மாசி தேரோட்டம் மார்ச் மாதம் 1- ம் தேதி நடைபெறும் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று திருத்தேரோட்டம் நடைபெற்றது. பக்தர்கள் தேரினை வடம்பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோயில் தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு அரூர், பாப்பிரெட்டிப்பட்டி 2 வட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.