புரோ கபடி லீக் தொடர் இறுதிப்போட்டி இன்று இரவு 8 மணிக்கு ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. இதில் புனேரி பல்டன் மற்றும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கிடையே கபடி லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், மொத்தம் 12 அணிகள் பங்குபெற்று விளையாடி வந்தன.
இந்த தொடரில், பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி கே.சி, குஜராத் ஜெயண்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பல்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோதாஸ் ஆகிய அணிகள் பங்கேற்றன.
இந்த தொடரில் இறுதிப்போட்டி இன்று ஐதராபாத்தில் நடைபெறவுள்ளது. இதில் புனேரி பல்டன் மற்றும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடவுள்ளன.
முதல் அரையிறுதி போட்டியில் பாட்னா பைரேட்ஸ் – புனேரி பல்டன் அணிகள் விளையாடியது. இந்த போட்டியில் ஆரம்பம் முதலே புள்ளிகளை எடுக்க தொடங்கிய புனேரி பல்டன் அணி 37-21 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் – ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் விளையாடின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 31-27 புள்ளிகளை பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்நிலையில் இன்று இறுதிப்போட்டி இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ளது ஐதராபாத்தில் நடைபெறவுள்ளது.