கர்நாடகா மாநிலம் பெங்களூரு இந்திரா நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் மர்ம பொருள் வெடித்ததில், ஹோட்டல் ஊழியர்கள் 3 பேர் உள்பட 8 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, அம்மாநில போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில், என்ஐஏ அதிகாரிகள் அதிரடியாக களத்தில் குதித்துள்ளனர். இந்திராநகரில் உள்ள ராமேஸ்வரம் கபே ஹோட்டலில், என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில், வாடிக்கையாளர் போல் ஒருவர் வந்து வெடிகுண்டு வெடிக்கச் செய்தது விசாரணையில் தெரிய வந்தது. மேலும், அங்கு சிதறிக்கிடந்த பொருட்களை ஆய்வுக்கு எடுத்து சென்றனர். , ஹோட்டலில் பதிவான சிசிடிவி காட்சிகளையும் சேகரித்தனர்.
இதனிடையே, வெடிகுண்டு வெடித்த விவகாரத்தில் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.