அயோத்தி ராமர் கோவில் வழக்கின் முக்கிய தொல்பொருள் ஆய்வாளர் காலமானார் பிரபல தொல்பொருள் ஆய்வாளரும், ராம ஜென்மபூமி வழக்கின் முக்கிய சாட்சியுமான அருண் ஷர்மா தனது 91வது வயதில் காலமானார்.
புகழ்பெற்ற தொல்பொருள் ஆய்வாளரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான அருண் குமார் சர்மா தனது 91வது வயதில் ராய்பூரில் இன்று காலமானார். அருண் குமார் சர்மாவின் மரணத்தை அவரது மகன் மணீஷ் சர்மா உறுதிப்படுத்தியுள்ளார்.
அயோத்தி ராமர் கோவில் வழக்கின் முக்கிய சாட்சிகளில் ஒருவராக அவர் இருந்தார். அதாவது ராமர் கோவில் இருந்த இடத்தில் தான் பாபர் மசூதி கட்டப்பட்டது என்ற ஆதாரத்தை தொல்பொருள் ஆய்வு மூலம் வழங்குவதில் முக்கிய பங்கு வகித்தார்.
சத்தீஸ்கர் அரசின் தொல்லியல் ஆலோசகராக பணியாற்றிய அருண் சர்மா, சத்தீஸ்கரில் பதவி வகித்த போது, சிர்பூர், தாரேகாட், சிராகோட், அராங், தலா, மல்ஹார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அகழ்வாராய்ச்சிகளை நடத்தினார்.
அவரது முயற்சிகள் வரலாற்று கலைப்பொருட்களை வெளிக்கொண்டு வர உதவியது. மேலும் இவர் வரலாற்றின் பக்கங்களை வெளியிடுவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியது. மத்திய அளவில் தொல்லியல் துறையில் மதிப்புமிக்க சேவைகளை வழங்கிய இவர் சத்தீஸ்கர் அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.