எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தல் நன்னடத்தை விதிகளைப் பின்பற்றவேண்டும்.மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் முன்னெச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிட தயாராகி வரும் நிலையில், தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் உட்பட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் எல்லாம் தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டுள்ளன.
தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் அன்றே தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதனை கவனத்தில் கொண்டு அரசியல் கட்சிகள், நட்சத்திர பேச்சாளர்கள், கட்சித் தலைவர்கள் அனைவரும் தேர்தல் நன்னடத்தை விதிகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள், ஆகிய வழிபாட்டு தலங்களுக்குள் சென்று தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது. மீறினால் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது .