தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிர சமிதி(பி.ஆர்.எஸ்.) கட்சி தோல்வி அடைந்த பிறகு, அக்கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் பாஜகவில் இணைந்து வருகின்றனர்.
நாகர்குர்நூல் நாடாளுமன்ற தொகுதியின் பி.ஆர்.எஸ். எம்.பி. பொதுகண்டி ராமுலு, அவரது மகன் பாரத் பிரசாத் மற்றும் சில பி.ஆர்.எஸ். கட்சியினர் பா.ஜ.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர். அதைத் தொடர்ந்து பி.ஆர்.எஸ். கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.பி.பட்டீல் இன்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.