ஒடிசா மாநிலத்தில், 1,100 சதுர கிலோ மீட்டருக்கும் மேற்பட்ட பரப்பளவைக்கொண்ட சிலிகா ஏரி அமைத்துள்ளது.
சிலிகா ஏரி ஒடிசாவில் உள்ள ஒரு உப்பு நீர் ஏரி, இது இந்தியாவின் மிகப்பெரிய கடற்கரை ஏரியாகும். இது வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்துள்ளது, இது பூரி, கஞ்சம் மற்றும் கந்தமால் மாவட்டங்களால் சூழப்பட்டுள்ளது.
இந்த ஏரி 1,100 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது, இது பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்குகளின் இருப்பிடமாகும். சிலிகா ஏரி ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகும், இது அதன் அழகிய நிலப்பரப்பு மற்றும் பறவையினங்கள் பார்ப்பதற்காக அறியப்படுகிறது. இந்த ஏரியில் பல தீவுகள் உள்ளன, அவற்றில் நளபனா தீவு பறவைகள் சரணாலயமாகும்.
மேலும் இங்கு பல இயற்கை காட்சிகளையும் காண முடியும். எவ்வளவு விலை கொடுத்தாலும் காண முடியாத விலை மதிப்பற்ற பல இயற்கை காட்சிகளையும் காண முடியும். இங்கு காலையில் அழகிய சூரியன் உதயத்தையும் மாலையில் அழகான சூரிய அஸ்தமனதையும் காணமுடியும். மேலும் இங்கு செல்பி ஸ்பாட்டும் அமைக்கப்பட்டுள்ளது.
அதில் அசோக சக்கரமும், தேசிய பறவை மயிலும் மற்றும் ஐ லவ் சிலிகா என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. இது பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்குகளின் இருப்பிடமாகவும் உள்ளது.