நாடு முழுவதும் பல்வேறு சாலைப் போக்குவரத்துத் திட்டங்கள், பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்ட தளத்தின் கீழ் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஜவுன்பூரில் ரூ.10,000 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் 10 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி,
நாடு முழுவதும் பல்வேறு சாலைப் போக்குவரத்துத் திட்டங்கள், பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்ட தளத்தின் கீழ் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக தெரிவித்தார்.
உத்தரப்பிரதேசத்தில் இன்று தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டங்கள் தடையற்ற போக்குவரத்து இணைப்பை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது என்றார்.
இது மிகப்பெரிய பொருளாதார நன்மைகளை வழங்கும் என்றும், நுகர்வோர், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் வணிகர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் என்றும் நிதின் கட்கரி தெரிவித்தார்.